இந்த மென்பொருளில் கீழ்க் கண்ட ஐந்து சித்த மருத்துவ நூல்கள் உள்ளன.
1. அனுபவ வைத்திய முறைகள்
2. அனுபவ வைத்தியத் திரட்டு
3. அனுபவ வைத்திய முறை தொகுதி 3
4. அனுபவ வைத்திய முறை தொகுதி 4
5. அனுபவ வைத்தியம் கைமுறை
தனித்தனியாக மென்பொருளைகளைப் போட்டால், கைபேசியில் அதிக இடம் பிடிப்பதுடன், எதில் என்ன சிகிச்சை உள்ளது என்று அறிவது கடினம். அத்துடன், மென்பொருளில் தேடவும், அடையாளக்குறியிடவும் முடியும்.
இந்நூல்களை ஏட்டுப் பிரதிகளிலிருந்து அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் அவைகளைப் பிழைத்திருத்தம் செய்து தமிழக அரசால் வெளியிடப்பட்டது. சில வீட்டு வைத்தியக் குறிப்புகளும், பல பரம்பரை சித்த வைத்தியர்களும், மற்றும் பல கைதேர்ந்த அனுபவம் மிக்க வைத்தியர்களும் கையாள, எளிய நோய்கள் முதல், கடினமான நோய்களுக்கும் சிகிச்சை முறைகள் உள்ளன.
இதில் 1700-க்கும் மேலாக சிகிச்சை முறைகள் விவரமாக உள்ளன. சில அரிய நோய்களுக்கு இந்நூலிகளில் உள்ள சிகிச்சை முறைகளை மற்ற நூல்களில் காண்பதரிது.
சில தீராத நோய்களுக்கு இந்நூலிகளில் உள்ள சிகிச்சை முறைகளை அனுபவம் மிக்க வைத்தியர்களின் உதவு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்.
அன்பர்கள் இதை உபயோகித்து நோயின்றி நீண்ட காலம் வாழ ஆண்டவன் அருள் புரிவானாக.